இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதி சுதர்சன பத்திரனவை இன்று கொழும்பில் சந்தித்தார்.
இந்தோனேஷியா-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு வலுவான மற்றும் பாதுகாப்பான இலங்கை முக்கியமானது என அமெரிக்கத் தூதுவர் டுவிட் செய்துள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு குறித்தும் தூதுவர் மற்றும் விமானப்படைத் தளபதி உரையாற்றினர்.