ஓட்டமாவடியில் இடநெருக்கடி- தயாராகும் புதிய 3 மயானங்கள்!

1439

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பறை ஆகிய பிரதேசங்களில் மேலும் மூன்று மயானங்கள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் மேலும் 2 ஏக்கர் நிலப்பரப்பை பொது மயானத்திற்கு பெற்றுக்கொள்வதற்கு கடந்த வாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓட்டமாவடியில் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 2,264 என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here