வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (Update)

1285

நேர்காணல் ஒன்றில் கொரோனா பரிசோதனையின் புள்ளிவிபரம் தொடர்பில் முன்வைத்த அறிக்கை குறித்து வாக்குமூலமளிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அது தொடர்பில் வாக்குமூலம் வழங்க சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் ஜயருவன் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணி கால அவகாசம் வழங்குமாறு கோரியயிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஜயருவன் பண்டார நேர்காணலில் தெரிவித்த விடயம் தொடர்பில், ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ரசித்த விஜேவன்ன மற்றும் ஒளடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ச ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here