follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுகமல் குணரத்னவிடம் வாக்குமூலம் பதிவு

கமல் குணரத்னவிடம் வாக்குமூலம் பதிவு

Published on

மைனாகோகம, கோட்டாகோகம உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர்களான சன்ன ஜயசுமன மற்றும் டொக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரிடமும் ஆணைக்குழு நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

தற்போது வரை சுமார் 30 அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான இந்த ஆணைக்குழு, ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு...

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...