follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு“ஒரே நாடு, ஒரே சட்டம்” இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

“ஒரே நாடு, ஒரே சட்டம்” இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Published on

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவி காலம் நிறைவடைந்திருந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டது.

13 பேர் கொண்ட இந்த செயலணியின் தலைவராக வண.கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.

இலங்கைக்குள் ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ மற்றும் சட்ட வரைவைத் தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா எனத் தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டது.

அதன்படி, பொது மக்கள் மற்றும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவின் கருத்துக்களை இந்த செயலணி பெற்றிருந்தது.

இந்தநிலையில், குறித்த செயலணி சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் ஜனாதிபதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் துயர மரணம் தொடர்பில் முன்னாள்...

இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றது. பலஸ்தீன் - "இழப்பு துயரமானது,...

இலங்கையை சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...