follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை

Published on

கொவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றின் புதிய திரிபு இதுவரை 110 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதனம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.

BA – 4, BA – 5 ஆகிய புதிய கொவிட் வைரஸ் திரிபுகள் தற்போது மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் உலகளாவிய ரீதியில் 20 சதவீதமாக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் திரிபுகளுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, உலக நாடுகள் தமது சனத்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வர வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிப்பாளர் நாயகம் அதனம் கேப்ரியஸஸ்  கோரிக்கை விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில்...

ரைசியின் மரணம் ஆழ்ந்த வருத்தமளிக்கிறது – வெனிசுலா ஜனாதிபதி

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro), ரைசியின் மரணத்தால் ‘ஆழ்ந்த வருத்தம்’ அடைவதாக தனது இரங்கல்...

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...