follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு!

தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு!

Published on

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.

எனினும் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கனேடிய நீதிமன்றம், மனுவினை நிராகரித்துள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

‘ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை’

விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை...

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...