வெளிநாட்டவரின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

980

நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் முடிவடையும் சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அலுவலகப் பணிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் விசா நீடிப்பை பெற்றுக் கொள்ளவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகளுக்கு தீர்வாக இவ்வாறு விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here