ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டிய எதிர்க்கட்சியினர்

1187

சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது குறித்த திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

நாட்டை இந்த நெருக்கடியான நிலையில் இருந்து முன்னெடுப்பதற்கு குறைந்தது 4 முதல் 5 வருடங்கள் தேவை என்று சுட்டிக்காட்டினார். இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றம் வந்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர்ந்து பிரதமரின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஜே.வி.பி.யினர் ஆறு மாத காலத்தில் நாட்டை முன்னெடுக்கும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சியினர் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கூச்சலிட ஆரம்பித்தனர்.

கூச்சலுக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றினார். பிரதமரின் உரையை ஜனாதிபதி தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார். உரை முடிந்தும் கூச்சல் நீடிக்க சபாநாயகர் சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here