சாரதிகளின் மோசடி : முச்சக்கர வண்டி பயணத்தை நிராகரிக்கும் மக்கள்

749

தன்னிச்சையான கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பாவனையில் இருந்து விலகி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

சில முச்சக்கரவண்டி சாரதிகள் மோசடியான முறையில் பொதுமக்களிடம் கட்டணங்களை அறவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி கட்டண அறவீடு தொடர்பில் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்க் கொண்டுள்ளனர். மக்கள் முச்சக்கரவண்டிகளை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

காரணம், எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் அதிக அளவில் முச்சக்கரவண்டி கட்டணங்களை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி சாரதிகள் தன்னிச்சையாக மற்றும் மோசடியான முறையில் பயணிகளிடம் அதிக அளவில் பணம் அறவிடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here