follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபுதிய கொரோனா திரிபு பரவும் அபாயம்

புதிய கொரோனா திரிபு பரவும் அபாயம்

Published on

புதிய திரிபு கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ள முடியும்.

கொரோனா 4ஆம் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்திற்கு அமெரிக்க தூதுவரின் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். X...

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...