இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமனம்

416
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் நியமித்துள்ளார்.

டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீபன்ஸ் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த தொழில் அதிகாரி ஆவார். மற்றும் இந்தியா மற்றும் இந்து சமுத்திரக் கிளையின் உதவி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

முன்னதாக அவர், ஸ்வீடன் மற்றும் தாய்லாந்து, பிரேசிலுக்கான தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அவுஸ்திரேலியாவின் நிரந்தர தூதுவராகவும் பணியாற்றினார்.

இந்தநிலையில், 70 வருடங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவியளிக்க அவுஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது என்று அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here