பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பம்

659

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் சற்று நேரத்திற்கு முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.

மேலும் மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here