‘ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்’

669

ஜனாதிபதியும் பிரதமரும் பொதுமக்களின் ஆணைக்கு பணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த அரசாங்கம் பல வருடங்களாக மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

குறைகளை நிவர்த்தி செய்ய பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கத் தவறியதன் காரணமாக நாடு நாளாந்தம் அராஜகத்தை நோக்கிச் செல்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆகவே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என சுதந்திரக் கட்சி சார்பாக கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து பிரதமரும் பதவி விலக வேண்டும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here