follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசேரவேண்டிய இடத்தை அடைந்த பின்னரே ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்!

சேரவேண்டிய இடத்தை அடைந்த பின்னரே ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்!

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப் படையின் விமானத்தில் நாட்டை விட்டு தப்பி சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவை அடைந்துள்ளார்.

அங்கிருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேறு நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...