4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

391

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும்  4 மில்லியன்  சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 869 ரக விசேட விமானத்தில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கு ஒரே தடவையில் கொண்டுவரப்பட்ட அதிகப்படியான தடுப்பூசி தொகை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here