SLPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை மீள நிர்மாணிப்பதாக பதில் ஜனாதிபதி உறுதி

733

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களை இழந்த அனைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை  மீளக் கட்டுவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக  சிங்கள நாளிதல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வீடுகளை அழித்தவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், தனது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும் பதில் ஜனாதிபதி தெரித்துள்ளார் .

மேலும்  அழிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு  ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here