தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்

458

இஸ்ரேலில் தலை ஒட்டி பிறந்த ஒரு வயதான இரட்டைக் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.

இஸ்ரேல் பீர்ஷெபா நகரில் அமைந்துள்ள சொரோகா மருத்துவ நிலையத்தில் 12 மணிநேரம் இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பலர் இந்த அறுவை சிகிச்சையினை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இரு சிறுமிகள் நன்றாக குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தலையின் பின்புறம் ஒட்டியிருந்த இரு பெண் குழந்கைளும் ஒருவரையொருவர் முதன் முதலாக பார்த்துக் கொண்டனர்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் 20 முறை மட்டுமே இத்தகைய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதுடன், இஸ்ரேலில் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ISRAEL: Twins conjoined at head separated after rare surgery - Naija Times

CrownHeights.info - Chabad News, Crown Heights News, Lubavitch  NewsCrownHeights.info – Chabad News, Crown Heights News, Lubavitch News

One-year-old conjoined twins finally separated after 12-hour surgery in  Israel | Evening Standard

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here