follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

Published on

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என வக்பு நியாய சபை அறிவித்துள்ளது.

அத்துடன் தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனின் சிபாரிசில் இப்பள்ளிவாசலுக்கு நியமிக்கப்பட்ட 13 நம்பிக்கையாளர்களின் நியமனத்தினையும் வாபஸ் பெறுமாறு வக்பு சபைக்கு வக்பு நியாய சபை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, வக்பு சட்டத்தின் 14ஆம் பிரிவின் கீழ் ஏனைய பள்ளிவாசல்களைப் போன்று இப்பள்ளிவாசலுக்கும் ஜமாத்தாரின் பங்கேற்புடன் புதிய நிர்வாக தெரிவிற்கான தேர்தலை அவசரமாக நடத்துமாறும் வக்பு சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் குறித்த தேர்தலை நடத்த முடியாவிட்டால் விசேட நம்பிக்கையாளர்களுக்கான நியமனத்தினை வழங்குமாறும் வக்பு நியாய சபை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, இந்தப் பள்ளிவாசல் தொடர்பாக தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவரினால் சிபாரிசு செய்யப்படுபவர்களை இப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களாக நியமிக்க வேண்டாம் என்றும் வக்பு நியாய சபை அறிவித்துள்ளது.

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசலினால் அப்பிரதேசத்திலுள்ள மூன்று ஜும்ஆப் பள்ளிவாசல்கள் மற்றும் ஒன்பது தைக்கியாக்கள் மேற்பார்வை செய்யப்படுகின்றது. இந்தப் பிரதேசத்திலுள்ள உலமாக்கள் மற்றும் மூத்தோர்களின் ஆலோசனையுடன் இந்தப் பள்ளிவாசலுக்கான நிர்வாகிகளை தெரிவு செய்தல் அல்லது நியமிப்பதற்கான அங்கீகாரம் தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனினுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முஸ்லிம் சலாஹுதீனினால் தெரிவுசெய்யப்பட்ட நம்பிக்கையாளர்கள் 2018.08.31ஆம் திகதி முதல் 30.08.2021ஆம் திகதி வரையான மூன்று வருட காலப் பகுதிக்கு கடமையாற்றினர்.

பின்னர் கொவிட் – 19 பரவல் காரணமாக இவர்களின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது. தற்போது இவர்கள் இந்த பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், இந்தப் பள்ளிவாசலுக்கான 13 நிர்வாகிகளை முஸ்லிம் சலாஹுதீனின் தெரிவுசெய்து அவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான கடிதத்தினை வக்பு சபைக்கு கடந்த 2023.08.07ஆம் திகதி அனுப்பியுள்ளார்.

இதற்கமைய, குறித்த நபர்களுக்கு வக்பு சபையினால் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அப்பிரதேசத்திலுள்ள உலமாக்கள் மற்றும் மூத்தோர்களின் ஆலோசனை பெறப்படமால் இந்த நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.

இந்த நியமனத்திற்கு எதிராக வக்பு சபையில் மேற்கொள்ளப்பட்ட மனு, எந்தவித விசாரணைகளுமின்றி 2023.10.12ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வக்பு நியாய சபையில் 2023.11.08ஆம் திகதி மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கல்ஹினையினைச் சேர்ந்த எம்.என்.எம். நுஸ்கி, எஸ்.எம். மஸாஹிர் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த மனுவில் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன் உள்ளிட்ட 12 பேர் இந்த மனுவில் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணைகள் வக்பு நியாய சபையின் தலைவர் கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் மற்றும் அதன் உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இல்யாஸ் மற்றும் ஏ.டப்ளியூ.எம். இம்தியாஸ் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

இவ்வாறன நிலையில் கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை இந்த மனு தொடர்பான தீர்ப்பு வக்பு நியாய சபையினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...