நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நபரின் செய்தி அறிக்கையிடலின் போது தனியார் தொலைக்காட்சியொன்றில் காத்தான்குடி பிரதேசமும் வீடு ஒன்றின் காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது.
கடந்த நான்காம் திகதி இரவு சிங்கள, தனியார் செய்திச் சேவையின் இரவு நேர செய்திகளில் இந்த செய்தி ஒளிரப்பப்பட்டது.
எனினும், இந்த வீடு தாக்குதல் தாரியின் வீடு அல்ல என்று எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
குறித்த செய்தியில் ‘தாக்குதல் தாரியின் வீடு இது” என்று குறிப்பிடப்படாத போதிலும், இதுதான் தாக்குதல் தாரியின் வீடு என்ற விம்பம் ஏற்படுத்தப்படுகிறது.
தீவிரவாதத் தாக்குதல் நடத்திய ஒருவரின் செய்தி அறிக்கையிடலின் போது காண்பிக்கப்படும் இவ்வாறு காட்சிகளினால் பிழையான புரிதல்கள் சித்தரிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு இதனால் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.