ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன – நியூசிலாந்து

832

ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் கவலை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 27 ஆம் திகதி இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

இதையடுத்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டார்.

அவர் டுவிட்டரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ ஒரே இரவில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான உரிமை ஆகியவை அனைத்து சுதந்திரமான சமூகங்களின் அடித்தளமாகும். எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here