follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்துவிட வேண்டாம் - ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்துவிட வேண்டாம் – ஐரோப்பிய ஒன்றியம்

Published on

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

நேற்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்திற்குமான பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை பாதுகாப்பதற்கும் நிலையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 01 பில்லியன் யூரோக்கள் உதவி வழங்கியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தில் இன்று சுகாதார வேலைநிறுத்தம்

வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடற்ற கொடுப்பனவு அல்லது DAT கொடுப்பனவை தங்களுக்கும் 35,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி, மாகாண...

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும்...

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...