follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியினால் மூவரடங்கிய குழு நியமனம்

ஜனாதிபதியினால் மூவரடங்கிய குழு நியமனம்

Published on

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் ஒருவர், ஜப்பானின் தயிஸே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக, சமூக வலைத்தளங்கள் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றில் குறிப்பிடப்பட்ட விடயத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியதுடன், அது குறித்து விசாரணை நடத்துமாறும், ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவிடம், இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...