உலகிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி

1361

உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கியூபாவில் ஆரபித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்தும் பணியை கியூபா ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில்,  2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்துள்ளது.

சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது.

கியூபாவில் ஒக்டோபர், நவம்பரில் பாடசாலைகள் படிப்படியாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை செல்லும் அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே பாடசாலைகள் திறக்கும் என்றும் கியூபா அரசு அறிவித்துள்ளது.

கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here