அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் – ஜி.எல். பீரிஸ்

843

தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும், அதனை அமுல்படுத்துபோது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமரப்போவதாக முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here