பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு

604

அவுஸ்திரேலியாவில் பாலியல்நோக்கத்துடனான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

2021 இல் 31,000 பேர் பாலியல் நோக்கதுடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன, இத்தகைய குற்றங்கள் மாத்திரம்  கடந்த வருடம் அதிகரித்துள்ளன என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் எனவும் புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஆண்கள் தங்கள் சகாக்களை வாழ்க்கை துணையை தாக்குவது அதிகமாக காணப்படுகின்றது என பாலியல் வன்முறை தொடர்பான முன்னிலை பணியாளரான டாரா ஹன்டர் தெரிவித்துள்ளார்.

37 வீதமான சம்பவங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளனஎன குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட உறவுகளின் சூழமைவின் அடிப்படையில் இவை இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here