கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம்

511

கொழும்பு மாநகர சபை இன்று கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, கொழும்பில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

இந்த வகையில் டச்சு வைத்தியசாலைக்கு அருகாமையிலும், ஜனாதிபதி மாவத்தைக்கு அருகில் உள்ள இலங்கை வங்கியிலும், கொழும்பு துறைமுகம் வரையிலான ஆர்மர் வீதியிலும் தனியான சைக்கிள் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ஆனது கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here