follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயணப் பை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

குறிப்பாக தனியார் பேருந்து சேவைகள், அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவற்றில் மக்களின் நெரிசலும் அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப் பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிடுவதற்காக சிலர் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...