இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கு வருகைதர வேண்டும் – ஜனாதிபதி

830

எதிர்வரும் தேர்தலில் போது அதிகம் இளைஞர் யுவதிகளே இப்பாராளுமன்றத்திற்கு வருகைதர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் தனது கொள்கை உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகள் என்ற வகையில் எமது எதிர்பார்ப்புகள் மற்றும் ;
அபிலாஷைகள் பலவற்றினை அடைந்துகொள்வதற்குரிய புதிய பொருளாதாரம் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள எம்மால் முடிந்தது.

தற்போது எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரம்
ஒன்றினை உருவாக்கிக்கொள்வதற்கு எமது இளம்பராயத்தினரின் முழுமையான பங்களிப்பு கிடைக்கப் பெறுதல் வேண்டும்.

அவர்களது திறமைகள் போராட்ட பூமிக்கு மாத்திரம்
வரையறுக்கப்படலாகாது. நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களது ஆக்கத்திறன்மிக்க திறமைகளை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பினை நாம் திறந்து விடுதல் வேண்டும்.

எதிர்வரும் தேர்தலானது இளைஞர் வர்க்கத்தின் சசந்தர்ப்பமாக அமைதல் வேண்டும்.

எனவே அதற்கு இடமளிக்க கூடிய வகையில் புதிய மனப் பான்மைகளைக் கொண்ட புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என நான் நினைக்கிறன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here