இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 41 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கெராங்க சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1,000 சிறைக் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறைச்சாலையில் சுமார் 2,000இற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.