இ.போ.சபை ஊடாக எரிபொருள் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றின் உத்தரவு

425

இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, மக்களுக்கு தேவையான எரிபொருள், மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முறையான சேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த போதே உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட இதனைக் குறிப்பிட்டார்.

விஜித் மல்லல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான மேலதிக யோசனைகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை நாளை மறுதினம் (07) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here