சர்வதேச கிரிக்கெட் நடுவரான 73 வயதான ரூடி கோர்ட்சன் காலமானார்.
ரூடி கோர்ட்சன் இன்று காலை தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுனிலிருந்து தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது ரிவர்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ரூடி கோர்ட்சன் சர்வதேச கிரிக்கெட்டில் 331 போட்டிகளுக்கு நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.