நாடு கடத்த வேண்டாம் : ஸ்கொட்லாந்து யுவதி ரிட் மனு தாக்கல்

960

தம்மை நாடு கடத்த குடிவரவு, குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஸ்கொட்லாந்து யுவதி கெய்லீ பிரேசர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்துகொண்டதாகவும்,அதன் பின்னர் தனது விசாவை இரத்துச்செய்வதற்கான தன்னிச்சையான முடிவை குடிவரவுகுடியகல்வு திணைக்களம் எடுத்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் குறித்த பதிவுகளை வெளியிட்டமைக்காக ஸ்கொட்லாந்து சுற்றுலாப்பயணியின் விசாவை ரத்துச்செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் 15ம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து வெளியேறவேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here