follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉள்நாடுகிளைபோசேட் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

கிளைபோசேட் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

Published on

கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் வழங்கிய உரிமத்தின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் இறப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் 100 % இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021 ஆம் ஆண்டில் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது.

இதனையடுத்து, களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை கடந்த 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசின் கொள்கையாகும்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த,...

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்கும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள் கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு...

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்...