கூட்டு பலாத்கார வழக்கிலிருந்து 11 பேரை விடுதலை செய்த இந்தியா

536

2002 ஆம் ஆண்டு இந்து-முஸ்லிம் கலவரத்தின் போது கர்ப்பிணி முஸ்லிம் பெண் ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 இந்து ஆண்கள் விடுதலை செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (16) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது பாதிக்கப்பட்ட பெண்ணின் மனைவி, சட்டத்தரணிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து கண்டனத்தை பெற்றுள்ளது

2008 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குற்றவாளிகள் எனத் இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சி முடிந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்தியா கொண்டாடும் போது, ​​திங்கள்கிழமை (15) மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள பஞ்சமஹால் சிறையில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவின் மிக மோசமான மதக் கலவரங்களில் ஒன்றான குஜராத் வன்முறை, 1,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது, அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அப்போது குஜராத்தை தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக வழிநடத்தினார், அவருடைய இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) இன்றும் அங்கு ஆட்சி செய்கிறது.

11 பேரும் சிறையில் இருந்த நேரம் மற்றும் அவர்களின் நல்ல நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாவட்ட சிறை ஆலோசனைக் குழு விடுதலை செய்ய பரிந்துரைத்ததாக பஞ்சமஹால்களின் உயர் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

இந்திய சட்டங்கள் குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலை பெற அனுமதிக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பெயர்போன நாட்டில் பெண்களை மேம்படுத்தும் இந்திய அரசின் கொள்கைக்கு முரணானது என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here