12 – 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி

503

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 7 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் பாடசாலைகளை திறப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். ஏற்கனவே பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 2 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here