வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகள் ஆகியவையும் குறித்த நாட்களில் மூடப்பட வேண்டும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதம் 10 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.