கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலிய தலைநகர் மொகதிசுவில் உள்ள தனியார் ஹோட்டலை குறிவைத்து இருமுறை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அல்ஷபாப் அமைப்பு இந்த குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 8 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்ஷபாப் அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொது இடங்களை குறிவைத்து இந்த தீவிரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறித்த அமைப்பு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.