தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு 95.8 வீதம் டெல்டா திரிபே காரணம்

1156

நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 வீதமான டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இம்மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வௌ;வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட வௌ;வேறு வகையான கொவிட் திரிபு பிசிஆர் மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய, மேல் மாகாணத்தில் பதிவாகும் புதிய தொற்றுக்கு 100 வீதமான டெல்டா திரிபே காரணமாகிறது என ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களில் பதிவாகும் புதிய கொவிட் தொற்றுகளுக்கு 84 முதல் 100 வீதமான வரை டெல்டா திரிபே காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here