follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஎரிசக்தி அமைச்சர் எதிர்க்கட்சிக்கு விடுத்த கோரிக்கை

எரிசக்தி அமைச்சர் எதிர்க்கட்சிக்கு விடுத்த கோரிக்கை

Published on

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (29) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேற்படி குழுவை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எரிசக்தி அமைச்சர் யோசனை முன்வைத்தார்.

குறிப்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் பல முன்னாள் எம்.பி.க்கள் எரிபொருளை மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும் என கூறி வருகின்றனர். அந்த வகையில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அவ்வாறான குழுவை அமைத்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், அதற்குத் தேவையான பூரண ஆதரவு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் தாள் தொடர்பிலும் விசாரணை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை...