பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

324

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் பல்வேறு கட்டங்களில் பல சவால்கள் காணப்பட்டாலும்,அவைகளுக்கு மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு முன்வந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களால் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதில் தடைகள் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தியிடம் அவ்வாறான எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

பெண்களின் சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் மதிப்பை ஜப்பான் போன்ற நாடுகளின் அபிவிருத்தியின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், கணவன் சம்பாதித்த பணத்தை திறம்பட நிர்வகிக்கும் திறன் பெண்ணுக்கே உண்டு எனவும் தெரிவித்தார்.

கொள்கை வகுப்பு உருவாக்கத்திலும் பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கு அதிக இடம் வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

போஷாக்கு குறைபாடு காரணமாக பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ஒரு நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்த பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“மாற்றத்திற்கான பாதை”எனும் கருப்பொருளில் நூறு பெண் உறுப்பினர்களுக்கான பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான ஆறுமாத பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (29) கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியினை பெப்ரல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here