இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
ஒற்றுமையே நாட்டின் மிகப்பெரிய சக்தி எனவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த 2,977 மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஒற்றுமை என்பது ஒரு போதும் உடைக்கப்பட முடியாதது என்பதை இதன் ஊடாக கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட நிவ்யோர்க், பென்டகன், பென்சில்வேனியா பகுதிகளுக்கு ஜனாதிபதி மற்றும் முதல் பெண் ஆகியோர் இன்று (11) செல்லவுள்ளனர்.
இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.