follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!

Published on

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரிசீலித்த நீதிபதி சஹான் மாபா பண்டார, சந்தேக நபர்களை குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரியவில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டிருந்த போது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இறக்கும் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் நேரடித் தொடர்புகளைக்கொண்டுள்ளதாகத் தெரிவித்து 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...