ஹம்பாந்தோட்டை, மித்தெனிய சதோஸ்மாதகம பிரதேசத்தில் இனந்தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய ஒருவர் பலியானார்.
நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்தவர், தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்தும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.