follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுSLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று

SLFPயின் 71 வது வருட பூர்த்தி இன்று

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 வது வருட பூர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மறைந்த பிரதமர் எஸ்.டப்ளிவ் ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் கொழும்பு நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய வருட பூர்த்தி நிகழ்வுகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வருட பூர்த்தி நிகழ்வின் போது, கட்சியின் யாப்பு திருத்தப்படவுள்ளது.

இதற்காக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மத்திய செயற்குழுவில் அனுமதி கிடைக்கப்பெற்ற கட்சியின் யாப்பு திருத்த யோசனை அந்த செயற்குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

தற்போது நான்காகவுள்ள சிரேஷ்ட உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 7 ஆக அதிகரிக்கவும், 10 ஆகவுள்ள உப தவிசாளர்களின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய திருத்தம் ஊடாக சிரேஷ்ட உப தவிசாளர்கள், உப தவிசாளர்கள், தேசிய அமைப்பாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோரை பதவி விலக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...