ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு சிங்கப்பூர் ஜனாதிபதி வாழ்த்து

525

இலங்கையின் 08வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிங்கப்பூர் குடியரசின் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் 57ஆவது தேசிய தினம், 2022 ஆகஸ்ட் 08ஆம் திகதி கொண்டாடப்பட்டதோடு அதனை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கும், சிங்கப்பூர் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானதற்கும் ஜனாதிபதியின் பணிகள் வெற்றியடைவதற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஹலிமா யாக்கோப் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here