நித்தியானந்தா வருகை குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை!

1057

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பில் எமது டெய்லி சிலோன் செய்திச்சேவை ஜனாதிபதி ஊடகப்பிரிவை வினவியபோது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் பதில் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here