சர்வதேச இளைஞர் கவுன்சிலின் புதிய தலைவராக நியமனம்பெற்ற இலங்கையர்!

1158

சர்வதேச இளைஞர் கவுன்சில் புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளது. சர்வதேச இளைஞர் கவுன்சில் (IYC) என்பது இளைஞர்களிடையே நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். 2007 இல் ஐக்கிய நாடுகள் சபையில் UN ECOSOC இல் சிறப்பு ஆலோசனை அந்தஸ்தும் பெற்றுள்ளது.
இவ்வமைப்பானது UN உறுப்பு நாடுகளிலுள்ள இளைஞர்கள் மற்றும் வக்கீல்களுக்கான நிலையான இளைஞர் மேம்பாடு தொடர்பான தளத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இலங்கையரான திரு. சதாம் திக்ரன் சாஜஹான், செப்டம்பர் 2, 2022 முதல் சர்வதேச இளைஞர் கவுன்சில் தலைமையகத்தை தலைமை நிர்வாக இயக்குனராக வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் பல சர்வேதேச இளைஞர் அமைப்புகளை வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

சர்வதேச இளைஞர் பேரவையின் இலங்கையின் தலைவராக 2012 இல் IYC இல் இணைந்தார்.
2013 இல் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த இளைஞர் பேரவை உட்பட பல இளைஞர் மன்றங்களுக்கான இலங்கை இளைஞர் தூதுவராகப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். மேலும் இக்காலத்தில் IYC இன் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கு இவர் பல உத்திகளையும் வகுத்துள்ளார்.

இது தொடர்பாக IYC இனால் வெளியிடப்பட்ட அறிக்கை

IYC appoints new head – Media Notice

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here