follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைக்க திட்டம்!

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைக்க திட்டம்!

Published on

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான முழுமையான நிரந்தர அலுவலகக் கட்டடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைவாக 175 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரச நிதி பயன்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.

மேலும் யுத்தத்த காலத்தின் போது உயிரிழந்தவர்கள், மாற்றுத்திறனாளி போர் வீரர்கள் மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக அவர்கள் ஆற்றிய உன்னத சேவைகளையும் பாதுகாப்புச் செயலாளர் நினைவு கூர்ந்தமை குறிப்பிடதக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...