பசிலுக்கு இடம் கொடுத்த ஜயந்த கெட்டகொட கப்ராலின் இடத்தை நிரப்புகிறார்

541

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜயந்த கெடகொட, தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான வாய்ப்பளித்து, தனது உறுப்புரிமையிலிருந்து விலகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here